பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலரும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இருப்பினும் சிலர் காலிறுதி சுற்று  வரை முன்னேறி தோல்வியை சந்திக்கிறார்கள்.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அவர் தென் கொரிய வீராங்கனையிடம் 4-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் தீபிகா குமாரி பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்து நிலையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.