பிரபல நடிகை ஷகிலா, தனது சமீபத்திய பேட்டியில் நடிகர் பாலகிருஷ்ணாவை பத்து வயதிலிருந்தே காதலித்ததாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒரு பொருட்காட்சியில் நடிகர் பாலகிருஷ்ணாவை முதன்முதலில் பார்த்ததிலிருந்து அவர் மீது தீராத காதல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பகிர்ந்து கொண்ட அவர்,

“பத்து வயதில் நான் பாலகிருஷ்ணாவை பார்த்ததும் என் மனதில் ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. அவர் என்னைப் பார்த்து சிரித்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது. அப்போதே என் அப்பாவிடம் நான் நடிகர் பாலகிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தேன்” என்று ஷகிலா உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.

பின்னர் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்த ஷகிலா, தனது இளம் வயது காதலை அவரிடம் பகிர்ந்துள்ளார். நடிகர் பாலகிருஷ்ணா ஷகிலாவின் இந்த தைரியமான பேச்சை கேட்டு சிரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.