தமிழகத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கடும் வெப்ப அலையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகு நடப்பாண்டு எல் நினோ ஆண்டாக இருக்கும் என பன்னாட்டு வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளது. இதனால் இயல்பை விட வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும். இதனால் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக இயல்பை விட வெப்ப அலை அதிகமாக இருக்கிறது. அதிகமான வெப்பத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வெயில் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்றவைகள் குறித்து ஒத்திகை நடத்த வேண்டும் எனவும், கோடைகாலத்தை எதிர்கொள்வதற்கு வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.