உலகம் முழுவதும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்ட துவக்கமாக இந்த வாரத்தில் மட்டும் சுமார் 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களாம். இதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பணி நீக்க நடவடிக்கை தொடரும். கடைசியாக கோடை காலத்தில் இறுதி சுற்று பணி நீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிஸ்னி நிறுவனத்தின் பணம் இழப்பு அடுத்த வருடத்தில் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிஸ்னி நிறுவனத்தில் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.