செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் இன்று மாலை  நேரத்தில் தோன்றும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியன் மறைவிற்கு பிறகு மேற்கு தொடுவானை உற்று கவனிக்கும் போது இந்த அரிய காட்சியைகாண முடியும் என்று நாசா விஞ்ஞானி பில் குக் தெரிவித்துள்ளார். இரவில் தொடுவானம் தொட்டு மேலே பாதி வானம் வரையில் 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும் எனவும் அரை மணி நேரத்தில் புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த அரிதான காட்சியை நம்மால் வெறும் கண்களாலும் பார்க்க முடியும் எனக் கூறும் விஞ்ஞானிகள், வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவை எளிதாக தெரியும் எனவும் புதனும், யுரேனசும் மங்கலாக தெரிய வாய்ப்பு உள்ளதால் பைனாகுலர்ஸ் வசதியுடன் பார்ப்பது சிறந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.