
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசை நிகழ்ச்சி கோவை கொடிசியா மைதானத்தில் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இவன் சங்கர் ராஜா நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பழைய பாடல்களை ரீமேக் செய்வதால் அதனுடைய உண்மைத்தன்மை மாறாது. தற்போது வளர்ந்து வரும் ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் இனிவரும் காலங்களில் இசையமைப்பாளர்கள் ஆகிய எங்களுக்கு கூட வேலை இல்லாமல் போகலாம்.
ஏஐ மென்பொருளுக்கான கட்டளைகளை தெரிந்தவர்கள் பணம் சம்பாதிக்க போகிறார்கள் என்று கூறினார். அதன் பிறகு நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை கூறியவர் அவருடைய கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக நான் அமைத்துக் கொடுப்பேன் என்றார். மேலும் நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்த நிலையில் அந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.