இந்தியாவில் சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீர்மட்ட உயர்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிப்படையும் என நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியான ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது.

கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக நீர்ப்பரப்பு விரிவடைந்து கடல் நீர்மட்டத்தின் உயர்வுக்கு காரணமாகிறது. மேலும் இந்த கடல் நீர்மட்ட உயர்வின் காரணமாக சென்னை, கொல்கத்தா, பாங்காங், மணிலா, யாங்கோன், ஹோ சி மின் சிட்டி போன்ற ஆசி நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.