நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மொழி மீளனும். நம்முடைய தாத்தா தேவநேயப்பாவாணர்… தமிழ் மீட்சியே… தமிழர் எழுச்சி என்கிறார். தமிழ் மீட்சியுரனும்… தமிழர் எழுச்சியுரனும் என்றால் ? தமிழர் ஆட்சி வரணும்.

ஐயா எடப்பாடி பழனிசாமி தமிழர் தானே…  அவர்  பெருக்கு பட்டம்  வேணும்னா…  புரட்சித்தமிழர் என்று போட்டுக்கலாம். இவ்வளவு நேரம் தமிழை குறித்து பேச வேண்டும். சீர், சந்தம், அசை, தொடை, யாப்பு என்று நன்கு கட்டமைக்கப்பட்ட உலக மொழி தமிழ். இதை நான் சொல்லல உலகப் பேரறிஞர்கள் சொல்கிறார்கள்.

பல்வேறு மொழிகள் தமிழில் இருந்து உருவானது. குறிப்பாக ஆங்கிலம்….   உடன் எஸ் போட்டு சடன். எல்லாம் திருடி உருவாக்கிட்டு பிச்சைக்கார பையன்…  அதை ஒரு அறிவுன்னு சொல்லிட்டு… மொழியை அழித்து,   நாசம் பண்ணிட்டோம்.

நீ தமிழ் படிச்சா வேலை கிடைக்குமான்னு சொல்லிட்டு, சுத்திட்டு திரி…  ஒரு நாள் அண்ணன் வந்து உட்கார்ந்த உடனே தமிழ் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று நிலை உருவாக்கினதும்.. மண்டியிட்டு படிக்கிறியா ? இல்லையான்னு பாரு. நெஞ்சில குத்தி குத்தி….  மண்டைல கொட்டி கொட்டி படிப்பான். அரசு பள்ளி – கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை.

தாய் மொழியில் பெயர் இருக்கான்னு பார்ப்பேன்.  ரமேஷ்.. தினேஷ்… ரிகேஷ்.. சுரேஷ்…  என்னடா பாம்பு மூச்சு விட்ட மாதிரி இருக்கேடா.. இஸ்சு… புசுன்னு.  வரிவடிவம் மாறலாம்,  ஒளி வடிவம் மாறக்கூடாது. கணேசன் அப்படின்னா என்னோட மொழி. ஒளி வடிவம் மாறல. கணேஷ், விகேஷ். அதனால தாய் மொழியில் பெயர் வைக்கணும், கட்டாயம்  சட்டமாயிடும்.

அப்படி பெயர் வச்சிட்டா வேலையில முன்னுமை.  நேர்காணல் எடுக்கிறவன்கிட்ட பேசுவேன்….  அய்யா இவன் எல்லாம்  அரசு பள்ளியில் படித்தவர், கல்லூரியில் படிச்சவன். போடு எல்லாருக்கும் வேலை. ஐயா இவன் தமிழ்ல படிச்சிருக்காங்க…  தமிழ் வழியில் படித்திருக்கிறான்… வேலையில் முன்னுரிமை. இங்கிலீஷ்ல ஏன்  தம்பி படிச்ச. நான்தான் முதலிலேயே சொன்னேனே…

தமிழ்ல படிக்க சொல்லி…  ஏன் தம்பி படிச்ச ? ஐயா வெளிநாட்டில் போய் வேலை செய்யணும்னு….  போயிட்டு வாயா… ஹிந்தி எதுக்குயா படிச்ச ?  வட இந்தியாவில் வேலை…. போயிட்டு வாயா,  செலவுக்கு காசு வேணும்னா,  வாங்கிக்கோ. கொடுத்து அனுப்பிடுப்பா…  போய் ஹிந்தியில் அங்க வேலை செய்ப்பா… இங்க இருக்கிற ஹிந்திகாரனையும் கூட்டிட்டு போப்பா. பிக்காலி கூட்டம். சமஸ்கிருதம் படி, சமஸ்கிருதம் படி. சரி நான் சமஸ்கிருதம் கத்துகிட்டு வரேன். எந்த கோவில்ல என்னை மணி அடிக்க விடுவ என தெரிவித்தார்.