மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் திரிஷ்யம், துடரும், லூசிபர், எம்பிரான் போன்ற மலையாள படங்களிலும், ஜெய்லர் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக திகழும் மோகன்லாலின் தாய் மாமன் கோபிநாத் நாயர்(93) நேற்று திடீரென காலமானார். அவர் தான் மோகன்லாலுக்கும் அவரது சகோதரருக்கும் பெயர் வைத்தவர் ஆவர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.