ஜப்பான் மக்கள் இந்திய திரைப்படங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். ரஜினியின் முத்து படத்தை பார்த்தபின் அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றத்தையே தொடங்கியுள்ளனர். அண்மை காலங்களில் திரைக்கு வந்த அனைத்து ரஜினி படங்களும் ஜப்பானிலும் திரையிடப்பட்டது.

இந்நிலையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய ஆர்ஆர்ஆர் படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்ற நிலையில், ஜப்பானியர்கள் ஆர்வமாக படத்தை பார்த்தனர். இந்நிலையில் ஜப்பானில் ஆர்ஆர்ஆர் படம் 200 தினங்கள் ஓடி ரூ.119 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆர்ஆர்ஆர் படம் உலகம் முழுவதும் ரூபாய்.1,235 கோடி வசூலித்திருக்கிறது.