நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த அவரது ரசிகர்களுக்கும், திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சில நேரங்களில் வாழ்க்கை நம் தலையில் கல்லால் அடிக்கும் RIPMarimuthu sir என உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகர் மாரிமுத்துவின் சொந்த ஊர் தேனி மாவட்டம். எனவே உடலை அங்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.