
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் அந்தப் படத்தை சூர்யாவின் 2d பிக்சர்ஸ் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பிடத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஆக உலகம் முழுவதும் 46 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படம் சூர்யாவின் 44ஆவது திரைப்படமாகும். சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த திரைப்படமாக தற்போது ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்நிலையில் ரெட்ரோ திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூபாய் 104 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் சூர்யா அந்தப் படத்தின் லாபத்திலிருந்து ரூபாய் 10 கோடியை அவரது அகரம் பவுண்டேஷனுக்கு தானமாக கொடுத்துள்ளார். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி சூர்யாவின் இந்தச் செயலை அவரது ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.