தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயிலில் கன்பார்ம் டிக்கெட் பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும். சிலர் தங்களின் ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்திருக்க மாட்டார்கள். இதன் காரணமாக பலர் தங்களின் வீடுகளுக்கு போகமுடியாமல் தவிக்கின்றனர். ஆகவே ஹோலிக்கு வீட்டிற்கு செல்வதற்கு முன் கன்பார்ம் டிக்கெட்டை எவ்வாறு பெறுவது என்பதை இன்று நாம் தெரிந்துகொள்வோம்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தல்

IRCTC இணையதளத்துக்கு சென்று இதற்கான கணக்கை உருவாக்கவும். அதன்பின் “என் பயணத்தைத் திட்டமிடுங்கள்” என்பதனை கிளிக் செய்து உங்களது ரயில் குறித்த விபரங்களை நிரப்ப வேண்டும். அடுத்ததாக விபரங்களை நிரப்பி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். உங்களது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ நிரப்ப வேண்டும். நீங்கள் பணம் செலுத்தியதும் உங்களது இருக்கையானது உறுதிசெய்யப்படும். உங்கள் இ-டிக்கெட்டை பிரிண்ட்அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ConfirmTicket பயன்பாட்டின் உதவியோடு உங்களது டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம். ConfirmTicket பயன்பாட்டை பதிவிறக்கி தனிப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்வதன் வாயிலாக லாகின் செய்து டிக்கெட்டை முன் பதிவு செய்யலாம். அதன்பின் லாகின் செய்ததும் அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்வதன் வாயிலாக மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விவரங்களை நிரப்ப வேண்டியதில்லை. இது உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும். கடைசியாக நீங்கள் பணம் செலுத்தியதும் உங்களது இருக்கையானது உறுதிசெய்யப்படும்.