
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகின்ற 15 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.