தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் அதிகரித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு விமானத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு 3500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 14,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோன்று சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 3500 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 13,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேப்போன்று திருச்சிக்கு செல்ல 2800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், 13,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல 3300 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது 11,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல 5,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருந்த நிலையில், நேற்று 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோன்று கொல்கத்தா செல்வதற்கும் 15,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு விமான டிக்கெட் விலை வழக்கத்தை விட அதிக அளவு உயர்ந்ததது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.