
டைரக்டர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் சென்ற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரிய ஹிட்டடித்தது. இந்த நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புது மைல்கல்லை எட்டி இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Pattunu pathiye.. Manasa kalachu.. #Ranjithame crosses 150M+ views now
https://t.co/Q56reRe9tc
https://t.co/gYr0tkVJkD#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman pic.twitter.com/UeJCms0hOr
— Sri Venkateswara Creations (@SVC_official) January 20, 2023