
ஹேமா கமிஷன் அறிக்கை மலையாளத் திரையுலகில் புயலை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மலையாள பட நடிகையான மினு முனீர் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 2013 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நடிகர் முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடவேள பாபு மற்றும் ஜெயசூர்யா ஆகியவர்களின் பெயர்களை அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான சம்பவத்தை பற்றி ஊடகம் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
அதில் அவர் படப்பிடிப்பு தளத்தில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய போது நடிகர் ஜெயசூர்யா எனது பின்னால் இருந்து என்னை கட்டி அணைத்ததுடன் என்னுடைய அனுமதி இன்றி முத்தம் கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடி விட்டேன். அவருடன் இருக்க சம்மதம் என்றால் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு தருவேன் என்றும் கூறினார். இதற்கிடையே நான் மலையாள பட நடிகர்களுக்கான கூட்டமைப்பு உறுப்பினராக விண்ணப்பம் பெறுவதற்காக செயலாளர் இடவேள பாபு என்பவரை அணுகினேன்.
இதற்கு அவர் உறுப்பினராக விண்ணப்பிக்க தன்னுடைய பிளாட்டுக்கு வரும்படி கூறினார். அதன்படி அவரது பிளாட்டுக்கு சென்றபோது உடல் ரீதியாக அவர் என்னை துன்புறுத்தினார். இதைத்தொடர்ந்து ஆளும் மார்க்சிஸ்டு கட்சியின் எம்எல்ஏவான முகேஷ் அவருடைய விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு உறுப்பினர் அந்தஸ்து தராமல் மறுத்துவிட்டார். இதற்கு சாட்சியாகவும் பாதிக்கப்பட்டவராகவும் தற்போது நான் இருக்கிறேன் எனவும் முனீர் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த நபர்களால் உடல் மற்றும் ஆபாச பேச்சுகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் படப்பிடிப்பில் தொடர்ந்து பணியாற்ற முயன்றேன் இருப்பிலும் பொறுக்க முடியாத அளவுக்கு துன்புறுத்தல் இருந்ததால் மலையாள திரை உலகை விட்டு வெளியே சென்றதாகவும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.