இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் மோத உள்ளன. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ், சரத் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. இதனை ரோகித் சர்மாவின் அப்பா, அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். மேலும் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் ஆகிய 3 பேரின் பெயர்களில் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இவர்கள் 3பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.