
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுள் ஒருவரான அருள்நிதி சமீபத்தில் டிமாண்டி காலனி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2015 ம் ஆண்டு டிமான்டி காலனி முதல் பாகம் வெளியானது. ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தற்போது அந்த படத்தின் பாகம் 2 வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், அருள்பாண்டியன், அர்ச்சனா, மீனாட்சி, கோவிந்தராஜன், முத்துக்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கவலையான விமர்சனங்களை பெற்றது. முதலில் 275 திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது 350 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டிமான்டி காலனி படத்திற்கான OTT உரிமையை ZEE5 நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் OTT-யில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் கடைசியில் இந்த படம் OTT-யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இது உறுதிப்படுத்தவில்லை.