இயக்குனர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவான விடுதலை படம் சென்ற ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் “விடுதலை 2″இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு முதல் பாகத்தில் இசையமைத்த இளையராஜா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகத்திலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடக்கின்றனர்.

இந்த நிலையில் விடுதலை 2 படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இளையராஜாவின் இசையில் தற்போது வெளியாகி உள்ள “தினம் தினமும்”என்ற பாடல் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின்  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.