லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையன்”. வேட்டையன் திரைப்படம் ஒரு அதிரடி நாடக திரைப்படமாகும். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகரான அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் அபிராமி, ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்தார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டாரின் மாஸ் நடிப்பால் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே இதன் ஓடிடி  ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் பெற்றது. நவம்பர் மாதம் 7ஆம்  தேதி அமேசான் பிரைம் வேட்டையன் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்தது. வேட்டையன் பட உரிமையை ரூபாய் 90 கோடிக்கு அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.