தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நேற்று அனுமதி கொடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வைத்தால் நான் வந்து அதை உடைப்பேன் என சீமான் ஆக்ரோஷமாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்கு புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி கொடுத்துள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மக்களிடம் முறையாக கருத்து கேட்காமல் மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்தாததால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சட்ட போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார்