அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த சர்புதின் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சேலத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்த விஏஓ வினோத் குமார் மீது கொலை முயற்சி என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற வேதனை கேள்வியை தான் எழுப்புகிறது. கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை இந்த முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பதில் செலுத்தவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ரவுடிகள் அச்சமின்றி நடைபெறும் இந்த ஆட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இன்று பதிவிட்டுள்ளார்.