மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது கடந்த 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும் போது, கடந்த 2019-ம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளே போதுமானது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும் திட்டம் எதுவும் தற்போதைக்கு கிடையாது என்றார். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.