தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோஜ் மஞ்சு. இவர் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன். கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் மனோஜ் மஞ்சு பிரணதி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பிறகு நடிகர் மனோஜ் மஞ்சுவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அரசியல்வாதி பூமா ரெட்டியின் மகள் மௌனிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மௌனிகாவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்தான்.

இந்நிலையில் நடிகர் மனோஜ் மஞ்சு மற்றும் மௌனிகாவின் திருமணம் ஹைதராபாத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் நடிகர் மனோஜ் மஞ்சுவுக்கு தற்போது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.