கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் குவைத் நாட்டிற்கு டிரைவர், செக்யூரிட்டி உள்ளிட்ட அப்பனுக்கு அனுப்புவதாக கூறி 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி காலம் தாழ்த்தி வந்தனர். நேற்று 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை வாங்குவதற்காக அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அலுவலகம் பூட்டி கிடந்தது.

இதனால் ஊழியர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதுவும் முடியவில்லை. இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் விசா நகலை மட்டும் எங்களிடம் கொடுத்தனர்.

அதன் பிறகு கூரியர் மூலம் பாஸ்போர்ட்டை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. எனவே வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.