தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சாமிநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்புறம்பியம் கீழத்தெருவில் வசிக்கும் சுதாகர், பெரம்பலூரை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் “விடியல் நதி மேலாண்மை” என்ற பெயரில் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் 5 சதவீத வட்டி தொகையுடன் இரட்டிப்பு லாபம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி பல்வேறு தவணைகளாக சாமிநாதன் 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் லாபத்தையும், சாமிநாதன் கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் அவர்கள் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து சாமிநாதன் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுதாகரை அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான சந்தோஷ் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.