திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பிச்சைமணி என்பவர் எனது மகன் கார்த்திக்கிற்கு எல்.ஐ.சி-யில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டார்.

அதன் பிறகு எனது மகனுக்கு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பிச்சைமணி மீது வடக்கு போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.