திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று வந்த அறிவிப்பை பார்த்துள்ளார். அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். அப்போது பல வீடியோக்களை பார்த்து லைக், ஷேர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவி அதன்படி செய்ததால் அவரது வங்கி கணக்கிற்கு 40 ஆயிரம் ரூபாய் வந்தது. இதனையடுத்து புதிய இலக்கில் வெற்றி பெற முன்பணம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மாணவி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து 18 லட்ச ரூபாய் வரை செலுத்தியுள்ளார். அதன் பிறகு மாணவிக்கு பணம் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.