பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு வருடத்தில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக விவசாயிகளுடைய வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 15வது தவணை சுமார் எட்டு கோடி விவசாயிகளுக்கு மாற்றப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுடைய கணக்கிலும்  2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

இந்த பணம் கிடைத்ததையடுத்து விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் பயன்படும் சில விவசாயிகளிடமிருந்து அரசு பணத்தை திரும்ப வசூலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரி செலுத்துபவர்களிடமிருந்து இந்த தொகை வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் பத்து தவணைக்கும் மேல் பண உதவி பெற்றுள்ளார்கள். வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கு பணத்தை திரும்ப வழங்க வேளாண்துறை நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.