கற்கும் திறன் அதிகம் உள்ள துளசி தனது 9 வயதில் பள்ளியின் படிப்பை முடித்து 21 வயதில் பிஎச்டி வெற்றிகரமாக முடித்து சிறுவயதிலே ஐஐடி ல் பேராசிரியராக பணியாற்றிய இவர் தற்போது வேலையில்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 1987 இல் பீகார் மாநிலத்தில் பிறந்த இவர் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் தனது 9 வயதில் பள்ளி படிப்பை முடித்தார் பின்பு 21 வயதில் கடினமாக படித்து பிஎச்டி முடித்து 22 வயதில் ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றினார்.

இவரை அனைவரும் பாராட்டி ஆச்சரியத்தில் பார்த்தனர். மும்பையில் ஐஐடியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் போது இவருக்கு எதிர்பாராத விதமாக ஒவ்வாமை என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்துள்ளார். அதிக ஆண்டு விடுப்பு எடுத்ததால் தன் பணியை தொடர முடியாமல் வேலை இல்லாமல் இருக்கும் இவர் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து தற்போது சட்டத்துறையில் ஆழ்ந்து புதிய தொழிலை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.