பிஎஃப் பணத்தை சந்தாதாரர்கள் கணக்கு தொடங்கி 5 வருடங்கள் முழுமை அடைந்த பிறகு அல்லது பணியில் இருந்து  விலகிய பிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு இந்த பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பும் அவர்கள் தங்களுடைய சரியான வங்கி கணக்கு விபரத்தை PF  கணக்கோடு இணைக்க வேண்டியது அவசியம். மேலும் புதிய கணக்கு விபரங்களை புதுப்பிக்காமல் தங்களுடைய வங்கி கணக்கை மூடி இருந்தால் அதை உடனே பிஎப் கணக்கிலும் அப்டேட் செய்ய வேண்டும். இவ்வாறு இபிஎப்ஓ சந்தாதாரர்கள் பிஎப் கணக்கில் வங்கி கணக்கை இணைப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

சந்தாதாரர்கள் EPFO-வின் e-SEWA வலைதள பக்கத்தில் உள்ள உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை சரியாக உள்ளிட்டு உள்நுழையவும். பிறகு Manage என்னும் தேர்வில் KYC என்பதை கிளிக் செய்யவும். பின் திரையில் தோன்றும் பக்கத்தில் உங்களது வங்கியை தேர்வு செய்து வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் IFSC குறியீட்டை சரியாக உள்ளிட்டு Save என்பதை கிளிக் செய்யவும். பிறகு உங்களது முதலாளி / நிறுவனத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்களின் சமீபத்திய வங்கி விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் தெரியும்.