நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்பட்ட வருவதால் உங்களின் ஓய்வூதிய தொகையின் இருப்பு தொகை மற்றும் பிற விவரங்களை அறிவதற்கு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக உங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை நான்கு எளிய வழிமுறைகளில் சரி பார்க்கும் வசதியை EPFO நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN”என்ற டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் விவரங்களை நீங்கள் பெற முடியும்.

இதனைப் போலவே 9966044425என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் pf பங்களிப்பு மற்றும் இறப்பு தொகை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக epfindia.gov.in என்ற இ சேவா இணையதளத்தில் உங்களின் யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுவதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் ஆப் ஸ்டோர், கூகுள் பிளே, விண்டோ ஸ்டோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உமாங் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் விவரங்களை உள்ளிட்டு பிஎஃப் பங்களிப்பு மற்றும் இருப்பு தொகையை அறியலாம்.