இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக பயண கட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் சலுகை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது விமானத்திலும் இலவச சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி தீர்த்த தரிசனம் என்ற திட்டத்தில் 60க்கும் மேற்பட்ட குடிமக்கள் அரசின் முழு செலவில் புனித ஸ்தலங்களுக்கு செல்லலாம் என்றும், இந்த தீர்த்த தரிசன திட்டத்தில் தற்போது புனித ரவிதாஸ் பிறந்த இடம் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் என்ற திட்டத்தை அரசு அறிமுகம் செய்த நிலையில் அந்தத் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், சீரடி மற்றும் காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அரசு இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.