நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு  பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை படி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் பனிக்கால முடிவதற்குள் உயிரிழந்து விட்டால் அவரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

தற்போது கருணையாளர் நியமனக் கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கருணையாளர் நியமனக் கொள்கையின்படி இறந்த அரசு ஊழியர்களின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறந்த அரசு ஊழியர்களின் திருமணமான மகள்களுக்கு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.