கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மாநகர் பகுதியில் இருக்கும் குமுதம் நகரில் தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டது. அதன் பிறகு நாயால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக தெரு நாய் தலையில் டப்பாவுடன் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் டப்பாவை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதனால் பொதுமக்கள் பிளானடிக் பவுண்டேஷன் என்ற விலங்குகள் நல தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் உதவியுடன் நாயை பிடித்து தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தனர். அதன் பிறகு நான் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் தன்னார்வ அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.