பெங்களூர்-மைசூர் விரைவு சாலையை வருகிற மார்ச் 11 ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ரூபாய்.8,000 கோடி மதிப்பிலான இந்த நடைபாதை சில பிரபலமான கர்நாடக நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்கள் (அ) அதற்கும் குறைவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை 275-ஐ எக்ஸ்பிரஸ்வே உட்பட 10 வழிச்சாலையாக NHAI விரிவுபடுத்தி உள்ளது.

தற்போது பெங்களூர்-மைசூர் விரைவு சாலைக்குரிய கடைசி மைல் பணிகளானது துவங்கப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவு சாலைக்கான பணியை தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை எட்டுவதற்குரிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பெங்களூர்-மைசூர் விரைவு சாலை திட்டத்தின் பலன்கள் என்னென்ன..?

# பெங்களூர்-மைசூர் வரையிலான தூரமானது 3 மணிநேரத்துக்கு பதில் 90 நிமிடங்களுக்குள் கடக்கும் என்று கூறப்படுகிறது.

# 59 ஓவர் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைப்பதன் வாயிலாக போக்குவரத்து நெரிசல் குறைவதோடு சாலை பாதுகாப்பும் கிடைக்கும்.

# தேசிய பொருளாதாரத்தை பெருக்குதல், இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் மாசுபாட்டை குறைத்தல்

# அதன்பின் முதலீட்டாளர்களை நகரத்திற்கு இழுக்கும்.

# மேலும் இது நகரமயமாக்கலை அதிகரிக்கும்

# ரியல் எஸ்டேட்டுக்கு லாபம்