
சீனாவின் புதிய தொழில்நுட்ப சாதனமாக ஸ்மார்ட் டிரான்ஸ்ஃபர் படுக்கை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளை ஒரு படுக்கையிலிருந்து மற்றொன்றிற்கு வலியின்றி மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை தூக்கி மாற்றும் போது, உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு வலி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த சாதனம் நோயாளியை படுக்கைத் தலையணையுடன் தூக்கி, மெதுவாக அடுத்த படுக்கைக்குள் செலுத்துகிறது.
View this post on Instagram
எந்தவொரு அசவுகரியமோ, வலியோ இல்லாமல் மாற்றமடைந்துவிடுகிறது. இது நோயாளிகளுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் பெரும் நிவாரணமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் படுக்கையைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவ, இது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய சாதனமாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டினர். இது போன்ற சாதனங்கள் சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
Xiaomi, Huawei போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ஒற்றை செயலியின் மூலம் வீட்டு மின்விளக்குகள், பாதுகாப்பு கேமராக்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் வசதியை வழங்குகின்றன. மேலும், AI தொழில்நுட்பத்துடன் கூடிய சமையல் ரோபோட், சிந்தித்து செயல் படும் ரைஸ் குக்கர், மேப் செய்து சுத்தம் செய்யும் ரோபோட் வாக்ஸ் என பல சாதனங்கள் உலகின் ஸ்மார்ட் ஹோம் சந்தையில் சீனாவின் பங்களிப்பை காட்டிக்கொடுக்கின்றன.