பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நல்லுறவுகளை மேம்படுத்த வர்த்தக நடவடிக்கைகளை சீராக்க வேண்டும் என இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் கூறியுள்ளார். லாகூரில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவுடன் பாகிஸ்தான் வர்த்தகத்தை நிறுத்திய போதிலும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

பாகிஸ்தான் நாட்டுடன் இயல்பான உறவை நோக்கி செல்வதற்கே இந்தியா விரும்புகிறது. எப்போதும் இந்தியா நல்லுறவை மட்டும்தான் விரும்பும் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே மீண்டும் வர்த்தகம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.