ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனிடையே உங்களது  ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின் அரசாங்கம் வழங்கும் பலன்களை பெற முடியாமல் போய்விடும் மற்றும் வங்கி சம்மந்தமான வேலைகளில் சில பிரச்சனைகள் ஏற்பட நேரிடும். ஆதார் கார்டில் உள்ள மக்கள் தொகை விபரங்களை புதுப்பிக்க (அ) மாற்ற விரும்புவோர் யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ மான இணையதளத்தில் சென்று மாற்றிக்கொள்ளலாம். அதன்படி முதலில் ஆதார் சுயசேவை புதுப்பிப்பு போர்ட்டலுக்கு https://ssup.uidai.gov.in/ssup/ செல்லவும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல்எண் மற்றும் otpஐ பயன்படுத்தி லாக்இன் செய்யவும். அடுத்ததாக சர்விஸ் ஆப்ஷனின் பிரிவில் “அப்டேட் ஆதார் ஆன்லைன்” என்பதை கிளி செய்ய வேண்டும். பட்டியலிலுள்ள எடிட் நேம் எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து பிழையை தட்டச்சு செய்து திருத்தவேண்டும். பின் படிவத்தினை பிரிவியூ செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டில் மாற்றம் செய்ய நீங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு (அ) நெட் பேங்கிங் வாயிலாக ரூ.50 செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தப்பட்டவுடன் சேவை கோரிக்கை எண் பெறலாம். அந்த எண்ணை பயன்படுத்தி செய்யப்பட்ட கோரிக்கையை நீங்கள் கண்காணிக்கலாம். உங்களது ஆதார் கார்டில் முகவரி, வயது, பாலினம் மற்றும் பிறந்த தேதியில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு மேலே கூறப்பட்டுள்ள செயல்முறையை நீங்கள் கடைபிடிக்கவும். ஆன்லைனில் ஈஸியாக புதுப்பிக்கலாம் (அ) ஆதார் பதிவு மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.