
பட்டய கணக்காளராக ஆக வேண்டும் என்றால் முதலில், இந்திய பட்டய கணக்கறிஞர்கள் கழகமால் நிர்வகிக்கப்படும் தொடர்ச்சியான பயிற்சி திட்டங்கள் மற்றும் தேர்வுகளை முடிக்க வேண்டும். அதன்படி மத்திய அரசு ஜனவரி 14 மற்றும் 16ஆம் தேதியில் Bussiness Laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவித்தது. இவ்வாறு பொங்கல் மற்றும் உழவர் தினத்தன்று CA பவுண்டேஷன் தேர்வு அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பொங்கல் திருநாளில் நடைபெற இருந்த CA தேர்வின் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி நடைபெற இருந்த பட்டய கணக்காளர் தேர்வு ஜனவரி 16 தேதி மாற்றப்பட்டுள்ளது என்று இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் தெரிவித்துள்ளது.