பிரபல நடிகரான மணிகண்டன் நடிப்பில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது. மணிகண்டன் தேர்ந்தெடுக்கும் படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் நடிகர்கள் குரலில் மிமிக்ரியும் செய்து காட்டுவார்.

ஒரு வீடியோவில் மணிகண்டன் தான் பணியாற்றிய சில படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். போல்ட் என்ற அனிமேஷன் படத்தில் மணிகண்டன் மூன்று புறாக்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். மூன்று வெவ்வேறு புறாக்களுக்கு திருநெல்வேலி தமிழில் மணிகண்டன் டப்பிங் பேசியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.