
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma), திரைப்படங்களில் பிசியாக இல்லாவிட்டாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஃபேஷன் தேர்வுகள் மூலம் தொடர்ந்து தலைப்புச் செய்திகளை ஏற்படுத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் (Virat Kohli) மனைவியாக அவரது போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் அனுஷ்கா, ICC Champions Trophy 2025 இறுதிப்போட்டியில் தனது ஸ்டைலிஷ் தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். துபாயில் (Dubai) நடைபெற்ற இந்த போட்டியில், அனுஷ்கா தனது தனித்துவமான டெனிம்-ஆன்-டெனிம் (Denim-on-Denim) தோற்றத்துடன் அணிகலன்கள் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அனுஷ்கா ஷர்மா அணிந்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்:
Maje Beaded Denim Shirt – ரூ . 28,356
Maje Shorts with Embroidered Beads – ரூ .26,439
Reflection De Cartier Bracelet – ரூ.1.15 கோடி
10 Diamond Bracelet White Gold in 18K – ரூ.15.25 லட்சம்
Prada Re-Nylon Bucket Bag – ரூ.1.75 லட்சம்
Alvar Shoes – ரூ.12,800
அனுஷ்காவின் அழகான தோற்றமும், பிரமாண்டமான ஃபேஷன் அணுகுமுறையும், அவரை பாலிவுட்டில் மட்டும் அல்லாது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் பேஷன் ஐகானாக (Fashion Icon) உருவாக்கியுள்ளது. அவரது சாதாரணமாக இருந்தாலும் தனித்துவம் மிக்க ஆடை அணிவதற்கான தேர்வுகள், ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. விராட் கோலியின் போட்டிகளுக்கு செல்லும் ஒவ்வொரு முறைவும், அனுஷ்காவின் ஃபேஷன் தேர்வுகள் பேசுபொருளாக மாறுகிறது, இதுவும் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்!