அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமானத்தில் ஏறும்போது நிலைத்தடுமாறி கீழே விழப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரம்ப் கடந்த ஜூன் 8-ம் தேதி நியூ ஜெர்சி மாகாணம் மோரிஸ்டம் விமான நிலையத்திலிருந்து மாரிலேண்ட்  மாகாணத்திற்கு ஏர் போர்ஸ் ஒன் என்ற விமானத்தில் சென்றார்.

அப்போது விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென ட்ரம்ப் நிலை தடுமாறி கீழே விழுவது போல் சென்றார். ஆனால் சட்டென சுதாரித்துக் கொண்டு பின்னர் அவர் படிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் சென்றார்.

இச்சம்பம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விமானங்களில் ஏறும் போது அடிக்கடி நிலை தடுமாறிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கதாகும்.