தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவற்றை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆண்கள் லுங்கி டி-ஷர்ட் அணிந்து வரவும், பெண்கள் லெகின்ஸ் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டு அமல்படுத்தப்பட்ட நிலையில் தஞ்சை பெரிய கோவிலிலும் தற்போது ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.