சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஓ தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி விதிமுறைகளை மேலும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதனால் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் மற்றும் ஆய்வாளர் மாணிக்கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்ததில் 2 அரசு பேருந்துகளிலும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் ஓட்டுனர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்சுகளை அணியாமல் விதிமுறைகளை மீறி உள்ளனர். இதனால் அவர்களுக்கு அதிகாரிகள் 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.