ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 288 ஆக இருக்கிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 900 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி ரஷ்ய அதிபர் புதின், நேபாள பிரதமர் பிரச்சண்டா, ஐநா பொது சபை தலைவர் சிசாபா கொரேசி, தைவான் அதிபர் சாய் இங் வென், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரிப் போன்ற பல உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்காக தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.