
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 13) அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமை தாங்குகிறார்.. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், முகமது நபி, ரஷித் கான் போன்ற நட்சத்திர வீரர்கள் மற்றும் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அகமது ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு 3 ரிசர்வ் வீரர்களையும் தேர்வு செய்துள்ளனர். குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப் மற்றும் ஃபரித் அகமது மாலிக் ஆகியோர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ரிசர்வ் வீரர்களாக இருப்பார்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களில் யாராவது காயம் அடைந்தால், அவர்கள் தங்கள் இடத்தில் அணியில் இணைவார்கள்.

மீண்டும் நுழைந்த நவீன்-உல்-ஹக் :
கடந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோலியுடன் மோதியதன் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் வில்லனாக மாறிய நவீன்-உல்-ஹக், உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் 2023 ஆசியக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட அணியில் நவீன் தேர்வு செய்யப்படாததால், இந்தியாவிலும் உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், இந்தியாவில் விளையாடிய அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தான் தேர்வாளர்கள் நவீனுக்கு அணியில் இடம் அளித்தனர்.
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி :
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்துல் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக்
ரிசர்வ் வீரர்கள் : குல்பாடின் நைப், ஷராபுதீன் அஷ்ரப், ஃபரித் அகமது மாலிக்
World Cup Bound AfghanAtalan Squad 🚨
Presenting before you the AfghanAtalan squad for the ICC Cricket World Cup 2023 in India. 🤩#AfghanAtalan | #CWC23 | #WarzaMaidanGata pic.twitter.com/r0SGg3KV8v
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 13, 2023