
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் சட்டபூர்வமாக பணியாற்றி வரும் வெளிநாட்டினர் சுமார் 4.78 கோடி பேருக்கும் சமீப காலங்களாக அவர்களது உரிமைகள், சலுகைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
தற்போதும் “தி ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற புதிய மசோதாவை அமெரிக்க நிர்வாகம் வரையறுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினர் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 45 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற புதிய மசோதா அனைவரையும் பெரும் கவலையடைய செய்துள்ளது.