செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் கட்டணமில்லா டோல் ஃப்ரீ எண் 1077, 044-27427412, 044-27427414, மற்றும் வாட்ஸ்அப் எண் 9944272345 போன்ற உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்களை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.

மழை எச்சரிக்கையைக் கண்காணித்து, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் வெள்ளம் நிரம்பியபோது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாவட்ட ஆட்சியர் மழை எச்சரிக்கையின் அடிப்படையில், அனைத்து மக்களும் தேவையில்லாமல் வெளியே செல்லாமல், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.